ரஜினி நடிக்க ரூ. 130 கோடியில் தயாராக உள்ள “ராணா” படம் முழுக்க சரித்திர கதை. இதில் ரஜினி மூன்று வேடங்களில் வருகிறார்.
சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் 7ஆம் அறிவு படமும் புராண கதை. “போகர்” என்ற சித்தர் வாழ்க்கையை கருவாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. சித்தர்களின் மாயாஜால அற்புதங்கள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
விக்ரம் நடிக்கும் “கரிகாலன்” படமும் சரித்திரக்கதை. பழங்கால யுத்த முறைகள் இதில் காட்சி படுத்தப்படுகின்றன.
தனுஷ் நடிக்க “மாரீசன்” என்ற பெயரில் சிம்புத்தேவன் புதுப்படம் இயக்க உள்ளார். இந்த படமும் மூவாயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று படமாக உருவாகிறது.
பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை படமாக்க மணிரத்னம் முயற்சித்து வருகிறார்.
கமலஹாசனும் மருதநாயகம் என்ற சரித்திர படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளார்.
சற்குணம் இயக்கும் வாகை சூடவா படம் சரித்திர படமாக உருவாகிறது.
ஆதி நடிக்கும் அரவாண் படமும் வரலாற்று கதை.
பாரதிராஜா இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படமும் சரித்திரக்கதையாகும்.
செல்வராகவன், மிஸ்கின் போன்றோரும் சரித்திரப் படங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்