Endhiran Audio CD Release in Mumbai

RObO

மும்பையில் பிரமாண்டமாக நடக்கவுள்ள எந்திரன் இசை வெளியீட்டு விழா
August 12, 2010 16:22:50
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிக்க, ஷங்கர் இயக்கியுள்ள மெகா பட்ஜெட் படமான எந்திரன். இந்தப் படம் இந்தியில் ரோபோ என்ற பெயரில் வெளியாகிறது. ரோபோ இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது.

வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இவர்களுடன் ரஜினிகாந்த், சன் குழுமங்களின் தலைவர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் பங்கு பெறுகின்றனர்.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா கூறியிருப்பதாவது:

ரோபோ இந்திப் படத்தின் இசை வெளியீடு மிகப் பிரமாண்டமாக மும்பையில் நடக்கிறது. அமிதாப் மற்றும் ஷாரூக்கான் இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்பதாகக் கூறிவிட்டனர். அமீர்கானும் தனது உடல்நிலை அனுமதித்தால் வருவதாகக் கூறியுள்ளார்.
மும்பை மேர்ரியட் ஓட்டலில் இந்த விழாவை அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றார் சக்சேனா.

இந்தப் படத்தில் ஷாரூக்கான்தான் நடிக்கவிருந்தார். ஆனால் ஷங்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் படம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோபோ என்ற பெயர் வரும் 8 தலைப்புகளை ஷாரூக்கான் பதிவு செய்து, படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தினார். ஆனாலும் ஷங்கர் முன்பே ரோபோ என்ற பெயரைப் பதிவு செய்திருந்ததால், ஷாரூக்கின் தந்திரம் பற்றி கவலைப்படவில்லை. வெற்றிகரமாக இந்தியில் வெளியாகவுள்ளது ரோபோ. இது ரஜினி ரோபோ.

-சிவாஜி டிவி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.